Breaking News

இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீர் ராஜினாமாவால் பரபரப்பு! முழு விவரம் Election Commissioner Arun Goel Resigns

அட்மின் மீடியா
0

இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீர் ராஜினாமாவால் பரபரப்பு! முழு விவரம்



நாடாளுமன்றத் தேர்தல் நாள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.அவரது பதவிக் காலம் 2027ம் ஆண்டு வரை உள்ள நிலையில் பதவி விலகியுள்ளார். 

தேர்தல் ஆணையராக அருண் கோயல் கடந்த கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் 21-ல் பொறுப்பேற்றார். இவரது பதவிக்காலம் வரும் 2027 ஆம் ஆண்டு வரை உள்ள நிலையில், இன்று தனது பதவியில் இருந்து விலகியுள்ளார் இவரது திடீர் ராஜினாமாவால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அருண் கோயல் ராஜினாமா கடிதத்தை இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டதாகவும், இன்று முதலே அருண் கோயல் தேர்தல் ஆணையர் பணியில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும் அரசிதழில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

3 ஆணையர்களைக் கொண்ட அமைப்பான இந்திய தேர்தல் ஆணையத்தில் தற்போது 2 பதவிகள் காலியாக உள்ளது. ஏற்கனவே ஒரு பதவி காலியாக இருந்த நிலையில், அருண் கோயலின் ராஜினாமாவால் காலி எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது, மேலும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே தற்போது பதவியில் உள்ளார்.

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback