Breaking News

தேர்தல் பத்திரங்களின் விபரங்களை இணையதளத்தில் வெளியிட்டது தேர்தல் ஆணையம்! பார்ப்பது எப்படி Election Commission uploads Electoral bonds data

அட்மின் மீடியா
0

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி எஸ்.பி.ஐ. அளித்த தேர்தல் பத்திர விபரங்களை, தனது இணையதளத்தில் வெளியிட்டது தேர்தல் ஆணையம்

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி எஸ்.பி.ஐ. அளித்த தேர்தல் பத்திர விபரங்களை தனது இணையதளத்தில் வெளியிட்டது இந்திய தேர்தல் ஆணையம்,

337 பக்க ஆவணத்தில் தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்களின் விபரங்களும், 426 பக்கங்களில் அதனை பணமாக மாற்றிய கட்சிகளின் விபரங்களும் அடங்கியுள்ளன

பாஜக தேர்தல் பத்திரங்கள் மூலம் ₹6,060 கோடியை| நன்கொடையாக பெற்று  முதலிடத்தில் உள்ளது! 

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ₹1,609 கோடி நன்கொடை பெற்று 2வது இடத்தில் உள்ளது

காங்கிரஸ் கட்சி ₹1,421 கோடி பெற்று 3வது இடத்தில் உள்ளது

அதிகபட்சமாக ₹1,368 கோடி நன்கொடை வழங்கி லாட்டரி மார்ட்டினின் நிறுவனமான Future Gaming And Hotel Servicesபல்வேறு காலகட்டங்களில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை நன்கொடையாக வழங்கி முதலிடத்தில் உள்ளது


எஸ்.பி.ஐ வங்கி வழங்கிய தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்தது இந்திய தலைமை தேர்தல் ஆணையம்விவரங்களைhttps://eci.gov.in/candidate-politicalparty என்ற இணையத்தில் தெரிந்து கொள்ளலாம் என அறிவிப்பு

அரசியல் கட்சிகளுக்கு ரொக்கமாக நன்கொடை தருவதை தவிர்க்கும் பொருட்டு 2018 ஜனவரியில் 'தேர்தல் பத்திரம்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் முறைக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்

கடந்த மாதம் 15ம் தேதி தேர்தல் பத்திரம் திட்டம் செல்லாது. அது தொடர்பாக திருத்தப்பட்ட சட்டங்களும் செல்லாது. எஸ்பிஐ வங்கி உடனடியாக தேர்தல் பத்திரம் விநியோக பணியை நிறுத்த வேண்டும்.கட்சிகளுக்கு நன்கொடையாளர்கள் பணம் அளித்துள்ள விவரத்தை இந்திய தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும். இந்திய தேர்தல் ஆணையம் அதன் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் மார்ச் 31ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் தேர்தல் பத்திர விவரங்களை நாளை மாலைக்குள் எஸ்பிஐ வங்கி வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட எஸ்பிஐ வங்கி கால அவகாசம் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

மேலும் தேர்தல் பத்திர விவரங்களை நாளை மாலைக்குள் எஸ்பிஐ வழங்க வேண்டும் என்றும், கட்சிகள் பெற்ற தேர்தல் பத்திர விவரங்களை மார்ச் 15க்குள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார். அதேபோல், நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்த தவறினால், அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை பாயும் எனவும் எச்சரித்தார். அதனை தொடர்ந்து எஸ்பிஐ வங்கி தேர்தல் பத்திரம் தொடர்பாக அனைத்து ஆவணங்களையும் உச்சநீதிமன்றத்தில் வழங்கியது 

இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி எஸ்.பி.ஐ. அளித்த தேர்தல் பத்திர விபரங்களை, தனது இணையதளத்தில் வெளியிட்டது தேர்தல் ஆணையம்

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி எஸ்.பி.ஐ. அளித்த தேர்தல் பத்திர விபரங்களை தனது இணையதளத்தில் வெளியிட்டது இந்திய தேர்தல் ஆணையம்,

337 பக்க ஆவணத்தில் தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்களின் விபரங்களும், 426 பக்கங்களில் அதனை பணமாக மாற்றிய கட்சிகளின் விபரங்களும் அடங்கியுள்ளன

எஸ்.பி.ஐ வங்கி வழங்கிய தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்தது இந்திய தலைமை தேர்தல் ஆணையம் விவரங்களை https://eci.gov.in/candidate-politicalparty என்ற இணையத்தில் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

இதில், எந்தெந்த நிறுவனங்கள் தனி நபர்கள் பத்திரங்களை வாங்கினார்கள் என்ற விவரங்களும் எந்தெந்த கட்சிகள் தேர்தல் பத்திரங்களை வங்கியில் கொடுத்து ரொக்கமாக மாற்றினார்கள் என்று விவரங்கள் வெளியாகி உள்ளது.

தேர்தல் பத்திரம் என்றால் : 

அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரம் மூலம் நிதி திரட்டும் நடைமுறையை கடந்த 2018-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்குவதற்கான பத்திரங்களை எஸ்பிஐ வங்கி வெளியிட்டு வந்தது. ரூ.1000, ரூ.10,000, ரூ. 1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி மதிப்பிலான பத்திரங்களை வாங்கி அரசியல் கட்சிகளுக்கு நிதி கொடுக்கலாம்.

இந்த தேர்தல் பத்திரங்களை பெறும் கட்சிகள், அவற்றை 15 நாட்களுக்குள் தங்கள் கணக்கில் வரவு வைக்க வேண்டும். இல்லை எனில், அந்த பணம் பிரதமரின் தேசிய நிவாரண கணக்கில் வரவு வைக்கப்படும்.

எஸ்.பி.ஐ. அளித்த தேர்தல் பத்திர விபரங்களை இணையதளத்தில் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

PART 1

PART II

https://www.eci.gov.in/disclosure-of-electoral-bonds

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback