உலகில் முதல் முறையாக சர்வதேச விமான நிலைய ஓடுபாதையில் இப்தார் நிகழ்ச்சி நடத்திய துபாய் வைரல் வீடியோ dubai runway iftar
உலகில் முதல் முறையாக சர்வதேச விமான நிலைய ஓடுபாதையில் இப்தார் நிகழ்ச்சி நடத்திய துபாய் வைரல் வீடியோ
உலகில் முதல் முறையாக துபாய் சர்வதேச விமான நிலைய ஓடுபாதையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் விமான நிலைய ஊழியர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
விமானங்கள் புறப்பட்டு கீழே இறங்கும் பின்னணியில், துபாய் சர்வதேச விமான நிலையத்தில் (DXB) ஊழியர்கள் குழு ஒன்று ஓடுபாதையில் முதன்முதலில் இப்தார் ஒன்றை நடத்தியது
விமான ஓடுபாதையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடத்தி துபாய் அரசு புதுமை படைத்துள்ளது
உலகிலேயே இது தான் முதல்முறை சர்வதேச விமான ஓடுபாதையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல கலாசாரங்களை கொண்ட விமான நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்ற விமான நிலைய அதிகாரிகள், ஊழியர்களுக்கு பேரீச்சம் பழம், தண்ணீர், ஜூஸ், பிரியாணி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்த பொருட்களை கொண்டு நோன்பு திறக்கும் நேரம் வந்ததும் அனைவரும் பிரார்த்தனை செய்து நோன்பை திறந்தனர்.
இதேவேளை, விமானங்கள் தரையிறங்குவது, செல்வதும் வழக்கம் போல் நடந்து வந்தன. இதனை பார்த்தவாறே நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டனர்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://twitter.com/Emirates247/status/1770394897813532798
Tags: மார்க்க செய்தி வைரல் வீடியோ
