Breaking News

அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் முழு விவரம் DMDK Candidate List 2024

அட்மின் மீடியா
0

அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர்கள் ப்ட்டியல் முழு விவரம் DMDK Candidate List 2024





திமுக கூட்டணி:-

தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய முஸ்லீம் லீக் மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.தொகுதி பங்கீடுகளும் முடிந்து தமிழ்நாடு-புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதிகளில் திமுக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 19 தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன.

பாஜக கூட்டணி:-

தமிழ்நாட்டில் பாஜக மெகா கூட்டணிக்கான பணியை செய்து வந்த நிலையில் தற்போது பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ,புதிய நீதிக்கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ்,இந்திய ஜனநாயக கட்சி மற்றும் பாமக, உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

அதிமுக கூட்டணி:-

2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி பா.ஜ.க., பாட்டாளி மக்கள் கட்சி, புதிய நீதிக் கட்சி, புதிய தமிழகம், தமிழ்மாநில காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இருந்த நிலையில் 

தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியான அதிமுகவுடன் தேமுதிக, எஸ்டிபிஐ, அகில இந்திய பார்வர்டு பிளாக், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது

எஸ்டிபிஐ கட்சி

எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

புதிய தமிழகம்

அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி (தனி) தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல்:-

விருதுநகர் - விஜய பிரபாகரன்

மத்திய சென்னை - பார்த்தசாரதி

திருவள்ளூர் - நல்ல தம்பி

கடலூர் - சிவக்கொழுந்து

தஞ்சாவூர் - சிவநேசன்



Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback