Breaking News

தேர்தல் பத்திரங்கள் யார் யாரிடம் இருந்து எவ்வளவு நிதி எந்த கட்சி பெற்றது புதிய தரவுகள் வெளியிட்ட தேர்தல் ஆணையம் direct link

அட்மின் மீடியா
0

 தேர்தல் பத்திரங்கள் யார் யாரிடம் இருந்து எவ்வளவு நிதி எந்த கட்சி பெற்றது புதிய தரவுகள் வெளியிட்ட தேர்தல் ஆணையம் direct link

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நிதி விவரங்கள் வெளியீடுயார் யாரிடம் இருந்து எவ்வளவு நிதிகள் பெறப்பெற்றது என்ற தரவுகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்



உச்சநீதிமன்றத்திலிருந்து பெற்ற தேர்தல் நன்கொடை விவரங்களை தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.இதற்கு முன்பு ஏப்ரல் 12, 2019 முதல் பிப்ரவரி 15, 2024 வரையிலான காலகட்டத்தில் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்கள் வெளியிடப்பட்டிருந்தன.

2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு, அதாவது 1 மார்ச் 2018 முதல் 12 ஏப்ரல் 2019 வரையிலான காலகட்டத்தில் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்களை தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்சநீதிமன்ற பதிவகத்திலிருந்து சீலிடப்பட்ட உரையில் தேர்தல் பத்திர நன்கொடை விவரங்களை பென்டிரைவில் டிஜிட்டல் மயமாகவும், அச்சிட்டு காகிதங்களாகவும் பெறப்பட்டது.உச்சநீதிமன்றத்திலிருந்து டிஜிட்டல் முறையில் பெறப்பட்ட தரவுகள் தேர்தல் ஆணைய இணையதள பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.மக்களவைத் தேர்தல் (ஏப்ரல் 19 முதல் ஜுன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக) நேற்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று தேர்தல் பத்திர நன்கொடை விவரங்களை முழுவதுமாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ள தரவுகளில் நன்கொடை பத்திரத்தின் எண், தேதி, பிரிவு, பத்திரம் கொடுத்த எஸ்பிஐ கிளை, பணமாக மாற்றப்பட்ட தேதி உள்ளிட்டவை அடங்கியுள்ளன..

தேர்தல் பத்திரம் என்றால் : 

அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரம் மூலம் நிதி திரட்டும் நடைமுறையை கடந்த 2018-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்குவதற்கான பத்திரங்களை எஸ்பிஐ வங்கி வெளியிட்டு வந்தது. ரூ.1000, ரூ.10,000, ரூ. 1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி மதிப்பிலான பத்திரங்களை வாங்கி அரசியல் கட்சிகளுக்கு நிதி கொடுக்கலாம்.

இந்த தேர்தல் பத்திரங்களை பெறும் கட்சிகள், அவற்றை 15 நாட்களுக்குள் தங்கள் கணக்கில் வரவு வைக்க வேண்டும். இல்லை எனில், அந்த பணம் பிரதமரின் தேசிய நிவாரண கணக்கில் வரவு வைக்கப்படும்.

எஸ்.பி.ஐ. அளித்த தேர்தல் பத்திர விபரங்களை இணையதளத்தில் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

PART 1

PART II

https://www.eci.gov.in/disclosure-of-electoral-bonds

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback