தொழுகை செய்த இஸ்லாமியர்களை எட்டி உதைத்த போலிஸார் சஸ்பெண்ட் வைரல் வீடியோ Delhi cop seen kicking Muslim men offering namaz on road
தொழுகை செய்த இஸ்லாமியர்களை எட்டி உதைத்து தாக்கிய துணை ஆய்வாளர் சஸ்பெண்ட் வைரல் வீடியோ
டெல்லியில் இந்தர்லோகில் உள்ள மசூதி ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு ஏராளமானோர் கூடிய நிலையில், மசூதிக்குள் இடநெருக்கடி ஏற்பட்டதால் சிலர் சாலையில் நின்று தொழுகை நடத்தினார்கள்
இஸ்லாமியர்கள் தொழுகை நடத்திக்கொண்டிருக்கும் போது அங்கு வந்த ல்லி ஒரு போலீஸ் காவலர் முட்டிபோட்டு தொழுது கொண்டிருந்தவர்களை எட்டி உதைத்து தாக்குகிறார். போலீஸாரின் இந்தச் செயல் அங்கிருந்தவர்களிடம் கோபத்தைத் தூண்டியது.
உடனடியாக அவர்கள் போலீஸாரைச் சூழ்ந்து கொண்டு அவர்களின் செயல்களுக்கு கண்டனம் தெரிவித்தனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது
இதனை அடுத்து சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அந்தச் சம்பவம் குறித்து பதில் அளித்துள்ள இணை ஆணையர் (வடக்கு) மீனா கூறுகையில்,
அந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அந்தப் போலீஸ் அதிகாரி பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://twitter.com/kalgikumaru/status/1766038187107819795
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ
