மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு முழு விவரம் cpim candidates in tamilnadu
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில், காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்டு, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9, புதுச்சேரி 1 என காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
மேலும் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி சிபிஎம் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது என சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்தார்
அதேபோல் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை, திருப்பூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன் அறிவித்துள்ளார்
சிபிஎம் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட மதுரை தொகுதியில் சு.வெங்கடேசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்
சிபிஎம் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட திண்டுக்கல் தொகுதியில் சச்சிதானந்தம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்
Tags: அரசியல் செய்திகள்
