குடியுரிமை திருத்தச் சட்டம்(சிஏஏ) நாடு முழுவதும் அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவிப்பு
அட்மின் மீடியா
0
மக்களவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், குடியரசுத் திருத்த சட்டம் (CAA), அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவிப்பு
குடியுரிமை திருத்தச் சட்டத்தை (CAA) நாடு முழுவதும் அமல்படுத்தும் வகையில் உள்துறை அமைச்சகம் இன்று அறிவிப்பாணை வெளியிட உள்ளதாக தகவல்
சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த சட்டம், நாடு முழுவதும் அமலுக்கு வருவதாக, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது
பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில், மதரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் சிறுபான்மையினருக்கு, இந்திய குடியுரிமை வழங்கும் மசோதா, பார்லிமென்ட்டில் சமீபத்தில் நிறைவேறியது. ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பிறகு, இது சட்டமானது.
இதையடுத்து, நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், இந்த சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல போராட்டங்கள் வன்முறையாக மாறியது
தமிழ்நாடு உட்பட மாநில முதல்வர்கள் இதனை தங்கள் மாநிலத்தில் அமல் படுத்த போவதில்லை என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்கள்
இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை, அரசிதழில், மத்திய அரசு வெளியிட்டது. இதன் மூலம், இச்சட்டம், நேற்று இரவு முதல், நாடு முழுவதும் அமலுக்கு வருவதாக, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.
குடியுரிமை திருத்தச் சட்டம் என்றால் என்ன?
2014 டிசம்பருக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் புலம்பெயர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள்,. சமணர்கள், பொளத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வழிசெய்கிறது
மேற்கண்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் குடியேறிய இஸ்லாமியர்களுக்கு இத்தகுதி தரப்படவில்லை
குடியுரிமை பெறுவதற்கு மதம் ஒரு காரணியாக முன்வைக்கப்படுவதால் இச்சட்டத்திற்கு எதிர்ப்பும் உள்ளது.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் அகதிகளாக வசித்துவரும் இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது
எனினும், அசாம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் வங்கதேசத்தில் இருந்து குடியேறிய இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கவும் எதிர்ப்பு நிலவுகிறது. தங்களது மாநிலத்தில் வங்காளிகள் ஆதிக்கம் அதிகரிக்கும் என அவர்கள் கூறுகின்றனர்
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்
%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpg)