Breaking News

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை என அமித்ஷா திட்டவட்டம்..CAA Will Never Be Taken Back Home Minister AmitShah

அட்மின் மீடியா
0

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை என அமித்ஷா திட்டவட்டம்..CAA Will Never Be Taken Back Home Minister AmitShah


நம் நாட்டில் இந்திய குடியுரிமையை உறுதி செய்வது நமது இறையாண்மை உரிமை, அதில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம், குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் ,குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை என அமித்ஷா திட்டவட்டம்..

தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில்:- 

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை ,நாங்கள் இதனை திரும்பப் பெற மாட்டோம். இந்த விவகாரத்தில் நாங்கள் எந்த சமரசமும் செய்துகொள்ள மாட்டோம். அதேபோல நாடு முழுவதும் சிஏஏ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். 

சிஏஏ குறித்து 2019ம் ஆண்டு தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம். கொரோனா தொற்று காரணமாகவே சிஏஏ சட்டத்தை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நாட்டின் சட்டம், தேர்தலுக்கு முன் அமல்படுத்தப்படும் என்று கடந்த 4 ஆண்டுகளில் 41 முறை கூறியுள்ளேன். 

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த முடியாது எனக்கூற மாநிலங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.குடியுரிமை என்பது நாட்டை ஆளும் ஒன்றிய அரசின் கீழ் வருகிறது என்பதால், அதில் முடிவெடுக்க மாநிலங்களுக்கு அதிகாரமில்லை என கூறினார்

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

அமித்ஷா பேட்டி பார்க்க:-

https://twitter.com/sunnyrajbjp/status/1768121301485363366

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback