அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை! C VijayaBaskar
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றார்கள்
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான புதுக்கோட்டையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வருமானவரித்துறை சோதனையின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், தற்போது சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது
அதேபோல் சென்னையில் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு தொடர்புடைய 10 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகின்றது
அண்ணாநகர், எழும்பூர், நீலாங்கரை, அடையாறு, நந்தனம் உள்ளிட்ட பத்து இடங்களில் சோதனை நடந்து வருகின்றது அமலாக்கத்துறை கொடுத்த ஆவணங்கள் அடிப்படையில் சோதனை எனத் தகவல்
மேலும் சென்னை நந்தனத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக அலுவலகத்திலும் வருமான வரித்துறை சோதனை
Tags: அரசியல் செய்திகள்
