Breaking News

போதை பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் கைது முழு விவரம்

அட்மின் மீடியா
0

 போதை பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் கைது முழு விவரம்


போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப் பொருட்களை (சூடோபெட்ரின்), தேங்காய் பவுடர் மற்றும் ஹெல்த் மிக்ஸ்  பாக்கெட்களில் மறைத்து வைத்து, வெளி நாடுகளுக்கு கடத்தப்படுவதாக டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. 

இதுதொடர்பாக, டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட நிலையில் கடந்த 15-ம் தேதி போதைப் பொருட்கள் தயாரிக்க பயன்படும் 50 கிலோ வேதிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.2,000 கோடி ஆகும்

மேலும் இதில்  சென்னை முகேஷ், மற்றும் முஜிபுர், விழுப்புரம் அசோக்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.  மேலும் இந்த கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்(36). மூளையாக இருந்தது தெரியவந்தது இவர் தி.மு.க.,வில் னெ்னை மேற்கு மாவட்ட அயலக துணை அமைப்பாளர் ஆக இருந்தார். இதையடுத்து, திமுகவில் இருந்து அவர் நிரந்தமாக நீக்கப்பட்டார்.

2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாக, ஜாபர் சாதிக்கை போலீசார் தேடி வந்த நிலையில், இரண்டு வாரத்திற்கும் மேலாக தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. பிற்பகல் 2 மணிக்கு நிருபர் சந்திப்பு நடைபெற உள்ளதாகவும், அப்போது அனைத்து விவரங்களும் கூறப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback