Breaking News

சி விஜில் ஆப் மூலம் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்த புகார் தெரிவிக்கலாம் தேர்தல் ஆணையம்

அட்மின் மீடியா
0

தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்த புகார் தெரிவிக்க சி விஜில் என்ற செயலியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது கூகுள் ப்ளேஸ்டோர் மூலமாக ஸ்மார்ட்போனில் 'C Vigil' செயலியை பதிவிறக்கம் செய்து, பயன்படுத்தலாம்.



ஆப் டவுன்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்

https://play.google.com/store/apps/details?id=in.nic.eci.cvigil


இதில் செல்போன் எண்ணை பதிவு செய்தும், செய்யாமலும் பயன்படுத்த முடியும்.

🗣வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா,

🗣பரிசுப் பொருட்கள் மற்றும் மதுபானம் விநியோகிப்பது,

🗣திருமண மண்டபங்களில் விருந்து வைப்பது,

🗣வாக்காளர்களை மிரட்டுவது,

🗣வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசுவது,

🗣வாக்காளர்களை வாகனங்களில் அழைத்துச் செல்வது,

🗣பொய்யான செய்திகளைப் பரப்புவது,

🗣பணம் கொடுத்து செய்திகளை பிரசுரிக்கச் செய்வது

🗣போன்ற அனைத்து நடத்தை விதிமீறல்கள் தொடர்பாகவும் இந்த செயலி மூலம் இது தொடர்பாக புகைப்படம் அல்லது வீடியோவாக எடுத்து புகார்அளிக்கலாம்.

🗣புகாரின் உண்மைத்தன்மை குறித்து விசாரித்து தேர்தல் ஆணையம் 1 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கும்

🗣உங்கள் பகுதியில் தேர்தல் முறைகேடு நடந்தால் இந்த ஆப் மூலம் போட்டோ வீடியோ எடுத்து அனுப்பினா போதும்

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback