தமிழகம் மற்றும் புதுவையில் இன்று வேட்பு மனு தாக்கல் தொடக்கம் தேர்தல் ஆணையம் அறிவிப்பு முழு விபரம்
அட்மின் மீடியா
0
தமிழகம் மற்றும் புதுவையில் இன்று வேட்பு மனு தாக்கல் தொடக்கம் தேர்தல் ஆணையம் அறிவிப்பு முழு விபரம்
தமிழகத்தில் உள்ள, 39 லோக்சபா தொகுதிகளுக்கும், விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும், புதுச்சேரி லோக்சபா தொகுதிக்கும், ஏப்ரல், 19 தேர்தல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழகம் மற்றும் புதுவையில் இன்று வேட்பு மனு தாக்கல் தொடக்கம்
வேட்பாளருடன் அதிகபட்சம் நான்கு பேரை மட்டுமே, மனு தாக்கல் செய்யும் இடத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது
காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே மனுத்தாக்கல் செய்ய அனுமதி
பிற்பகல் 3 மணிக்கு மேல் தேர்தல் நடத்தும் அலுவலக வளாகத்தில் ஒருவருக்கும் அனுமதியில்லை
வேட்பு மனு தாக்கல் நடக்கும், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களில், போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அலுவலகத்தை சுற்றி 100 மீட்டர் துாரத்திற்குள், வாகனங்கள் நுழையாமல் இருக்க, தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தேர்தலில் போட்டியிடுவோர், வேட்பு மனு தாக்கல் செய்ய, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. தேர்தல் நடத்தும் அலுவலரிடம், வேட்பாளர்கள் வேட்பு மனுவை சமர்ப்பிக்க வேண்டும்.அவர் இல்லையெனில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனு அளிக்கலாம்.
வேட்பு மனு தாக்கல் செய்யும் அலுவலகத்தை சுற்றி, 100 மீட்டர் பகுதிக்குள், வேட்பாளர் வாகனம் மற்றும் இரண்டு வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும்.மனு தாக்கல் செய்ய, வேட்பாளர் மற்றும் அவருடன் நான்கு பேர் மட்டும் அனுமதிக்கப்படுவர். அதற்கு மேல் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
மனு தாக்கல் நிகழ்வு முழுதும் வீடியோவில் பதிவு செய்யப்படும்.
வேட்பாளர்கள் நேரடியாக அல்லது முன்மொழிபவர் வழியே, வேட்பு மனுவை தாக்கல் செய்யலாம்.
முன்மொழிபவர் அல்லாத நபரிடம் கொடுத்து அனுப்பினால் ஏற்றுக் கொள்ளப்படாது.வேட்பு மனுவை ஆன்லைனில் பூர்த்தி செய்யலாம். ஆனால், ஆன்லைனில் சமர்ப்பிக்க முடியாது. அதை பிரின்ட் எடுத்து நேரடியாக வழங்க வேண்டும்.
அரசியல் கட்சி வேட்பாளராக இருந்தால், ஒருவர் முன் மொழிந்தால் போதும். சுயேச்சை வேட்பாளராக இருந்தால், 10 பேர் முன்மொழிய வேண்டும்.
அதேபோல, வேட்பு மனுவில், சொத்து விபரங்கள், வழக்கு விபரம் போன்றவற்றை முழுமையாக தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
Tags: அரசியல் செய்திகள்
