Breaking News

நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன

அட்மின் மீடியா
0

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.


மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. 

நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள்அமலுக்கு வந்ததால் தமிழ்நாடு அரசுதலைமைச் செயலகத்தில் உள்ள தலைவர்கள்படங்கள் உள்ளிட்டவை அகற்றப்பட்டன. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் உள்ள தலைவர் படங்கள், கட்சி பேனர்கள் அகற்றும் பணி தொடங்கியது

தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்ன என்ன? சிறு குறிப்பு

  • ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரம் வரை மட்டுமே ரொக்கமாக எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்க்கு மேல் பணம் எடுத்துச்செல்வோர், அதற்கான ஆதார ஆவணங்களையும் உடன் எடுத்துவர வேண்டிய கட்டாயம்
  • கோவில், மசூதி, தேவாலயம் போன்ற வழிபாட்டு தலங்களில், நோட்டீஸ் ஒட்டுதல், என எந்த வித தேர்தல் பிரசாரமும் செய்யக் கூடாது.
  • ஏதேனும் புகார்கள் என்றால்  1950 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.

  • பிரசார கூட்டத்தை தேர்தல் நடப்பதற்கு 48 மணி நேரம் முன்பாக முடித்து கொள்ள் வேண்டும் 
  • தனிநபரின் விருப்பமின்றி அவரது வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம், மறியல் நடத்த கூடாது.
  • ஒரு கட்சியின் பொதுக் கூட்டம் நடக்கும் இடத்தில், வேறொரு கட்சியின் ஊர்வலத்துக்கு அனுமதியில்லை.
  • ஸ்பீக்கர்களை இரவு 10 மணியில் இருந்து காலை 6 மணி வரை பயன்படுத்தக் கூடாது
  • இரவு 10 மணிக்கு மேல் கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த தடை விதிக்கப்படுகிறது.  
  • தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பின்னர் தேர்தல் முடியும் வரை, ஆட்சியில் உள்ள அரசு புதிய நலத் திட்டங்களை அறிவிக்கக் கூடாது. ஆனால், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த எந்த தடையும் இல்லை.
  • புதிய கட்டிடங்கள், மேம்பாலங்கள், சாலைகள் திறப்புவிழா போன்ற ரிப்பன் வெட்டும் நிகழ்ச்சிகள் எதுவும் அரசால் நடத்தப்படக்கூடாது.
  • அரசின் செலவில் தொலைக்காட்சி, ஊடகங்கள், நாளிதழ்களில் விளம்பரம் செய்யக்கூடாது. 
  • அரசு ஊழியர்களையோ, அரசு வாகனங்களையோ பரப்புரைக்கு பயன்படுத்தக் கூடாது.
  • கட்சித்தலைவர்களின் சிலைகள், அரசியல் கட்சிகளின் சின்னங்கள் போன்றவை மூடி மறைக்கப்படும்.
  • தொலைக்காட்சி, கேபிள் நெட்வொர்க், ரேடியோ போன்றவற்றில் பரப்புரை விளம்பரங்களை வெளியிட, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 3 நாட்களுக்கு முன்னதாகவே தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்.
  • வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் கொடுப்பது, வாக்காளர்களை உணர்வுபூர்வமாக தூண்டிவிடுவது, ஆள்மாறாட்டம் செய்வது, வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்குள் வாக்கு சேகரிப்பது, வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணி நேரங்களுக்குள் பொதுக்கூட்டம் நடத்துவது, வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளை செய்வது போன்ற 'ஊழல் நடவடிக்கைகளை' கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தவிர்க்க வேண்டும்.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback