ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறேன் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறேன் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேரதலில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறேன் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
இன்று மதியம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க. 20 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார்
இந்நிலையில் பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறார் ஓ.பன்னீர்செல்வம் என அவர் அறிவித்துள்ளார்
பாஜக கூட்டணி:-
தமிழ்நாட்டில் பாஜக மெகா கூட்டணிக்கான பணியை செய்து வந்த நிலையில் தற்போது பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ,புதிய நீதிக்கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ்,இந்திய ஜனநாயக கட்சி மற்றும் பாமக, உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இந்திய ஜனநாயக கட்சி
பாஜக கூட்டணியில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் அறிவித்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி:-
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது
புதிய நீதிக்கட்சி
அதேபோல் வேலூர் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடப்போவதாக புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்
புதிய தமிழகம் கட்சி
அதன்படி புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
பாஜக வேட்பாளர்கள் பட்டியல்
இந்நிலையில் 9 தொகுதிகளுக்கான பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது
தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் - தமிழிசை சவுந்தராஜன் அவர்கள் போட்டியிடுகின்றார்
மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியில் - வினோஜ் செல்வம் அவர்கள் போட்டியிடுகின்றார்
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் - ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக்கட்சி) அவர்கள் போட்டியிடுகின்றார்
கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் - நரசிம்மன் அவர்கள் போட்டியிடுகின்றார்
கோவை நாடாளுமன்ற தொகுதியில் - அண்ணாமலை அவர்கள் போட்டியிடுகின்றார்
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில்- பாரிவேந்தர் (இ.ஜ.க) அவர்கள் போட்டியிடுகின்றார்
திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில்- நயினார் நாகேந்திரன் அவர்கள் போட்டியிடுகின்றார்
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில்- பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் போட்டியிடுகின்றார்
Tags: அரசியல் செய்திகள்
