Breaking News

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கீடு.!

அட்மின் மீடியா
0

ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய கூட்டணி சார்பில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகின்றது.


சிதம்பரம் தொகுதியில் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் போட்டியிடுகிறார். விழுப்புரம் தொகுதியில் அக்கட்சியைச் சேர்ந்த ரவிக்குமார் போட்டியிடுகிறார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த இவர்கள் இருவருக்கும் பானை சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback