பாஜக கூட்டணியில் இணைந்தது அமமுக டிடிவி தினகரன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளோம். பாஜக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவை அமமுக அளிக்கும்.பாஜகவின் வெற்றிக்கு அணில் போல உதவியாக இருப்போம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தேர்தலை சந்திக்கவுள்ளதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், தமிழகத்தில் திமுக கூட்டணி தொகுதி பங்கீட்டை இறுதி செய்துள்ளது.அதிமுகவும், பாஜகவும் கூட்டணியை இறுதி செய்வதற்காக தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக கூட்டணியில் இணைந்து மக்களவை தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும், அமமுக கோரிக்கைகளை பாஜகவுக்கு அளித்துள்ளதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
Tags: அரசியல் செய்திகள்
