Breaking News

கட்சி தலைமை முடிவெடுத்தால் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன் அண்ணாமலை பேட்டி

அட்மின் மீடியா
0

தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்த தகவல் எங்கிருந்து, யார் சொன்னார்கள் எனத் தெரியவில்லை. பா.ஜ.,வை பொறுத்தவரை எந்த பணியை கொடுக்கிறார்களோ, அதை செய்கிறேன்.ஒருவேளை கட்சி தலைமை லோக்சபா தேர்தலில் போட்டியிட சொன்னாலும் செய்வேன். இதில் என்னுடைய தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு எதுவும் கிடையாது. நான் கட்சியிடம் எதையும் கேட்கவில்லை. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் பா.ஜ., தலைமை யாரை நிறுத்தப்போகிறார்கள் எனத் தெரியாது.

கட்சி வளர்ந்துள்ளது என்பது லோக்சபா தேர்தல் முடிவுகளில் தெரியும்.மோடியின் கால் நகத்தில் உள்ள தூசிக்கு உதயநிதி சமம் கிடையாது. அவருடைய அப்பா, தாத்தாவை வைத்து அரசியலுக்கு வந்து எம்எல்ஏ, அமைச்சரானார். வருகின்ற மார்ச் 4- ஆம் தேதி கல்பாக்கம் வரும் பிரதமர் மோடி, அன்று மாலை 5.30 மணிக்கு சென்னையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார் எனத் தெரிவித்தார்.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback