Breaking News

திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சற்குணபாண்டியனின் மருமகள் சிம்லா முத்துச்சோழன் அதிமுகவில் இணைந்தார்!

அட்மின் மீடியா
0

திமுகவின் துணை பொதுச்செயலாளராக இருந்த எஸ்.பி.சற்குணபாண்டியனின் மருமகள் சிம்லா முத்துச்சோழன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

 


 இது தொடர்பாக அஇஅதிமுக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:-

மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு பழனிச்சாமி அவர்களை, சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று (7.3.2024- வியாழக் கிழமை), திமுக முன்னாள் அமைச்சர் மறைந்த திருமதி S.P. சற்குண பாண்டியன் அவர்களுடைய மருமகள் திருமதி சிம்லா முத்துச்சோழன் அவர்கள் நேரில் சந்தித்து, தன்னை கழகத்தில் இணைத்துக்கொண்டார். 

இந்நிகழ்வின்போது, கழக அமைப்புச் செயலாளரும், திருநெல்வேலி புறநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. இசக்கி சுப்பையா, M.L.A., அவர்களும் உடன் இருந்தார். 

திமுக துணை பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சற்குண பாண்டியனின் இரண்டாவது மருமகள் சிம்லா முத்துச்சோழன்   சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக உள்ளார். 

2016 சட்டசபை தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து திமுக சார்பில் களமிறக்கப்பட்டார் சிம்லா முத்துச்சோழன்.அந்த தேர்தலில் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா வெற்றி பெற்றார்.

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback