அதிமுக பெயர், சின்னம், கொடி பயன்படுத்த பன்னீர்செல்வத்துக்கு விதித்த இடைக்கால தடையை நிரந்தரம் செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
அதிமுக கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு தடை
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் கட்சியின் பெயர், சின்னம், கொடி மற்றும் லெட்டர் பேட் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும், அதிமுக பொதுச்செயலாளராக தன்னை தேர்தல் ஆணையமும், உயர்நீதிமன்றமும் அங்கீகரித்துள்ள நிலையில், ஓபிஎஸ் இவ்வாறு செயல்படுவது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும். இதனால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என இபிஎஸ் மனு தாக்கல் செய்திருந்தார்.
எடப்பாடி பழனிசாமி மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, கட்சியின் பெயர், கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து ஒ.பி.எஸ். சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்
இந்த வழக்கில் அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் ஓ.பன்னீர் செல்வத்துக்கு விதித்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
இந்த நிலையில் அதிமுக கட்சி சார்பாக Form A மற்றும் B படிவங்களில் கையெழுத்திட்டு இரட்டை இலைச் சின்னத்தை வேட்பாளர்களுக்கு வழங்கும் அதிகாரத்தை தனக்கு வழங்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளார், இதை செய்யாத பட்சத்தில் அதிமுக (OPS) என்ற பெயரில் மக்களவைத் தேர்தலில் நிற்க அனுமதிக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
Tags: அரசியல் செய்திகள்
