Breaking News

மன்னார்குடியில் குழந்தை கடத்தல் குறித்து பொய் செய்தி பரப்பியவர் கைது!

அட்மின் மீடியா
0
குழந்தை கடத்தல் என தவறான தகவல்களை சமூகவலைத்தளத்தில் பதவிட்டு வதந்தி பரப்பிய டிராக்டர் ஓட்டுனர் கைது




தமிழகத்தின் பல்வேறு இடங்களில் குழந்தைகள் கடத்தப்பட்டு வருவதாக பொய் தகவல்களைப் பரப்பிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குழந்தை கடத்தல் தொடர்பாக பொய்யான காணொலி பதிவுகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு, அது பொதுமக்களிடையே தேவையில்லாத அச்சத்தை ஏற்படுத்திவருகிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இது மாதிரியான பொய்யான வீண் வதந்திகளை பதிவேற்றம் செய்பவர்கள் மற்றும் பகிர்பவர்களை சமூக ஊடகப்பிரிவு மூலம் (Social Media Cell) கண்காணிக்கப்பட்டு கடுமையான சட்ட நடவடிக்கை உட்படுத்தப்படுவார்கள்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

பொதுமக்கள் இது தொடர்பான தகவல்களை காவல்துறை உதவி எண் 100 அல்லது 112 கட்டணமில்லா தொலைபேசி எண் அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என காவல்துறி சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம்  மன்னார்குடியில் குழந்தைகள் கடத்தப்படுவது தொடர்பாக டிவிட்டர் தளத்தில் தவறான தகவலை பதிவிட்டு வதந்தி பரப்பிய டிராக்டர் ஓட்டுநர் சதீஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback