டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது முழு விவரம்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருவதாகவும், கேஜ்ரிவாலிடம் விசாரணை நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லி மதுபான கொள்கை தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகைகளில் அம்மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வழக்குத் தொடர்பாக அர்விந்த் கேஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறை சார்பில் அவருக்கு இதுவரை 9 சம்மன்கள் வழங்கப்பட்டுள்ளன.
தனக்கு வழங்கப்பட்ட சம்மன்கள் அனைத்தையும் நிராகரித்துள்ள கெஜ்ரிவால் அவை சட்டவிரோதமானவை என்றும், அரசியல் ரீதியாக தூண்டப்பட்ட வழக்குகள் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில், தன்னை அமலாக்கத் துறை கைது செய்வதிலிருந்து சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் கேஜ்ரிவால் தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் சுரேஷ் குமார் கைட், மனோஜ் ஜெயின் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கைது நடவடிக்கைக்கு தடைவிதிக்க மறுத்துவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து இன்று இரவு 7 மணியளவில் 12 அதிகாரிகள் கொண்ட அமலாக்கத்துறை குழு, டெல்லியில் உள்ள அர்விந்த் கேஜ்ரிவாலின் இல்லத்தில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்
