Breaking News

மீண்டும் எம்எல்ஏ ஆனார் பொன்முடி அரசானை வெளியிட்ட தமிழ்நாடு அரசு

அட்மின் மீடியா
0
மீண்டும் எம்எல்ஏ ஆனார் பொன்முடி  அரசானை வெளியிட்ட தமிழ்நாடு அரசு 


பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கு 3 ஆண்டு தண்டனை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடந்த 1996 முதல் 2002 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பொன்முடிஅவரது மனைவி விசாலாட்சி , பொன்முடியின் மாமியார் சரஸ்வதி, சிகா கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவர் மணிவண்ணன் , அறங்காவலர் நந்தகோபால் ஆகியோர் மீதுவிழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 

இந்த வழக்கு விசாரணை இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 2015-ம் ஆண்டு விழுப்புரம் லஞ்ச ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. 

இந்நிலையில், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்றும் போதிய ஆதாரமில்லை என்று கூறி நீதிமன்றம் அவர்களை விடுவித்தது.

இருதரப்பினரின் வாத பிரதிவாத விசாரண முடிந்து அளித்த தீர்ப்பில், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. அதனால் அவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டது நீதிமன்றம்

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடியை விடுவித்தது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது

இந்த வழக்கில் இருதரப்பு விசாரணை முடிந்து  சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாமாக முன்வந்து விசாரிக்கும் வழக்கில், கீழமை நீதிமன்ற தீர்ப்பை தள்ளுபடி செய்து, அவரையும், அவரது மனைவியையும் குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது மேலும் . 

அமைச்சர் பொன்முடி 64.90 சதவீதம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது நிரூபணம் ஆகியுள்ளதாக சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கும் அவரது மனைவிக்கும்  3 ஆண்டு சிறை தண்டனையும் இருவருக்கும் தலா 50 லட்சம் அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .மேலும் சிறைதண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

இந்த நிலையில் அமைச்சர் பதவியை இழந்த பொன்முடி தண்டனையை நிறுத்தி வைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் .

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது, 

அதன்படி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ-வாக தொடர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback