முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சொத்து வரி விலக்கு தமிழ்நாடு அரசு அறிவிப்பு
நடப்பு நிதியாண்டில் இருந்து முன்னாள் ராணுவ வீரர்கள் சொத்து வரி மற்றும் வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலும் வருமான வரி செலுத்துபவராக இருக்கும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இந்தத் திட்டம் பொருந்தாது என்றும் தமிழக அரசு தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 19-ம் தேதி தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, சொத்துவரி திருப்பிச் செலுத்தும் திட்டம் அனைத்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பன்படி தற்போது முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சொத்து வரி, வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
முன்னாள் ராணுவ வீரர்கள் தமிழ்நாட்டில் நிரந்திரமாக குடியிருப்பாளராக இருத்தல் வேண்டும்.
முன்னாள் ராணுவ வீரர்களின் சொந்த வீட்டிற்கு, அவர்களின் சொந்த பயன்பாட்டில் குடியிருப்பாக பயன்படுத்தப்படும் கட்டடத்திற்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்படும்.
முன்னாள் ராணுவ வீரர்கள் வருமானவரி செலுத்துவராக இருக்க கூடாது.
ராணுவ பணியில் இருந்து ஒபிவு பெற்றபின் மறுவேலைவாய்ப்பு முறையில் தமிழ்நாடு அரசு துறைகள், மத்திய அரசு பணிகள், மத்திய மாநில பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் இந்த மறு வேலைவாய்ப்பு பணியில் இருந்து ஓய்வூதியம் பெறுபவர்களாக இருத்தல் கூடாது.
Tags: தமிழக செய்திகள்
