Breaking News

இடைநிலை ஆசிரியர் பணி விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு

அட்மின் மீடியா
0

2024ஆம் ஆண்டிற்கான இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மார்ச் 20ஆம் தேதி வரை நீட்டிப்பு

இணையவழியாக விண்ணப்பம் பதிவேற்ற விண்ணப்பதாரர்கள் கூடுதல் அவகாசம் கோரிய நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை\

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இடைநிலை ஆசிரியர் 2024 ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை எண் 012024, நாள்09022024 அன்று வெளியிடப்பட்டு விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய 5032024 மாலை 5.00 மணிவரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விண்ணப்பதாரர்கள் பலரும் இணையவழியாக விண்ணப்பம் பதிவேற்றம் செய்ய கூடுதல் கால அவகாசம் கோரியுள்ளனர். அதனடிப்படையில் மேற்காண் பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய கடைசி தேதி 15,03,2024-லிருந்து 20.03.2024 மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்படுகிறது.

மேலும், விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் திருத்தம் |Edit Option) மேற்கொள்ளவும் அவகாசம் வழங்க கோரியதின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் (Edit Option மேற்கொள்ள விரும்பினால் 21032024 முதல் 23.03.2024 மாலை 5.00 மணி வரை திருத்தம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

Tags: தமிழக செய்திகள் வேலைவாய்ப்பு

Give Us Your Feedback