கொலை வழக்கில் வேறு நீதிமன்றத்தில் சரணடைவது செல்லாது - மெட்ராஸ் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
கொலை வழக்கில் வேறு நீதிமன்றத்தில் சரணடைவது செல்லாது - மெட்ராஸ் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள் சம்மந்தப்பட்ட நீதிமன்றத்துக்கு பதில் வேறு நீதிமன்றத்தில் சரணடைவது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளராக இருந்த ஆராவமுதன் என்பவர் மீது அடையாளம் தெரியாத மர்ம கும்பல் நாட்டுவெடிகுண்டு வீசி அரிவாளால் வெட்டியதால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்கள்.
இந்நிலையில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தான் சரணடைய அடைய வேண்டும். வேறு நீதிமன்றங்களில் சரணடைய முடியாது. எனவே சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்ததை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் ஜி.மோகன கிருஷ்ணன் எழுத்துபூர்வமான வாதங்களை தாக்கல் செய்திருந்தார்
இதற்கு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் ஆஜராகி எதிர்ப்பு தெரிவித்தார். பாதுகாப்பு காரணமாக குற்றவாளிகள் எங்கு வேண்டுமானாலும் சரணடையலாம் என்றும் குற்றவாளிகள் சரண்டரை அனுமதிக்க வேண்டும் எனவும் வாதம் வைத்தார்.
இதையடுத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அளித்த உத்தரவில்:-
குற்ற வழக்குகளில் சரணடைபவர்கள் சம்மந்தப்பட்ட எல்லைக்குட்பட்ட நீதிமன்றங்களுக்கு பதிலாக வேறு நீதிமன்றத்தில் சரணடைவது செல்லாது எனவும்
சம்பந்தப்பட்ட நீதித்துறை எல்லைக்கு உட்படாத மாஜிஸ்திரேட் முன்பு தாக்கல் செய்யப்படும் மனுக்கள் விசாரணைக்கு உகந்தது அல்ல.
ஒருவேளை யாரேனும் சரணடைந்தால் அவரை சிறையில் அடைக்க குறிப்பிட்ட நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும்
அவ்வாறு ஒருவர் சரணடையும் நிலையில் குறிப்பிட்ட மாஜிஸ்ட்ரேட் தனது எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்து, சரணடையும் நபரை காவலில் எடுக்க உத்தரவிடலாம். இந்திய தண்டனை சட்ட பிரிவுகளின் கீழ் பதியப்படும் வழக்குகளுக்கு மட்டுமே இந்த உத்தரவு பொருந்தும்’ என்று நீதிபதி பிறப்பித்துள்ள தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
Tags: தமிழக செய்திகள்
