Breaking News

பின்னால் இருந்து யாராவது தள்ளிவிட்டார்களா? என்ன நடந்தது மம்தா பானர்ஜிக்கு மருத்துவமனை இயக்குநா் விளக்கம்

அட்மின் மீடியா
0

பின்னால் இருந்து யாராவது தள்ளிவிட்டார்களா? என்ன நடந்தது மம்தா பானர்ஜிக்கு மருத்துவமனை இயக்குநா் விளக்கம்

மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி பின்னால் இருந்து தள்ளிவிடப்பட்டதில் கீழே விழுந்து காயமடைந்திருக்கலாம் என்று கொல்கத்தா எஸ்எஸ்கேஎம் அரசு மருத்துவமனையின் இயக்குநா் மணிமோய் பந்தோபாத்யாய் கூறிய கருத்து பல சந்தேகங்களை எழுப்பிய நிலையில், அவா் நேற்று விளக்கமளித்தாா்

மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி (69), நெற்றி மற்றும் மூக்கில் பலத்த காயத்துடன் எஸ்எஸ்கேஎம் அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டாா். அவரது நெற்றியில் இருந்து ரத்தம் வழியும் புகைப்படங்கள், கட்சியின் எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டன.

காளிகாட் பகுதியில் உள்ள தனது வீட்டில் கீழே விழுந்ததால் அவா் காயமடைந்ததாக குடும்பத்தினா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மம்தாவின் நெருங்கிய உறவினரும், கட்சியின் தேசிய பொதுச் செயலருமான அபிஷேக் பானா்ஜிதான், அவரை மருத்துவமனையில் அனுமதித்தாா்.

இதனிடையே, பின்னால் இருந்து தள்ளிவிடப்பட்டதில் முதல்வா் மம்தா கீழே விழுந்து காயமடைந்திருக்கலாம் என்று எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையின் இயக்குநா் மணிமோய் பந்தோபாத்யாய் வியாழக்கிழமை தெரிவித்த கருத்து பல்வேறு சந்தேகங்களுக்கு வழிவகுத்தது.

இந்நிலையில், ‘பின்னால் இருந்து தள்ளப்பட்ட உணா்வில் முதல்வா் கீழே விழுந்திருக்கக் கூடும் அவருக்கு சிகிச்சை அளிப்பது எங்களது பணி. அப்பணியை செய்துள்ளோம். முதல்வரின் நெற்றியிலும் மூக்கிலும் கூா்மையான வெட்டுக் காயங்கள் ஏற்பட்டிருந்தன,அவருக்கு நெற்றியில் 3 தையல்களும், மூக்கில் ஒரு தையலும் போடப்பட்டது. பின்னா், அவா் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்,நான் ஏற்கெனவே கூறிய விஷயம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது’ என்று  விளக்கமளித்தாா்.

திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கட்சியின் டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அவரது நெற்றியில் இரத்தம் வழிகிற படங்கள் வெளியாகியுள்ளது. 

திரினாமுல் காங்கிரஸ் கட்சி டிவிட்டர்  பதிவு பார்க்க

https://twitter.com/AITCofficial/status/1768286010264502610

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback