Breaking News

நீங்கள் நலமா?' திட்டம் நாளை தொடக்கம் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு நீங்கள் நலமா திட்டம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

நீங்கள் நலமா?' திட்டம் நாளை தொடக்கம்  முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு நீங்கள் நலமா திட்டம் முழு விவரம்


அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைவதை உறுதிசெய்யும் வகையில் 'நீங்கள் நலமா?' என்ற திட்டம் நாளை (மார்ச் 6) தொடங்கப்பட உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்

மயிலாடுதுறையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார். அப்போது பேசிய அவர் 

தமிழக அரசின் திட்டங்கள் உரிய முறையில் மக்களை சென்றடைகின்றனவா என்பதை உறுதிசெய்யும் வகையில் 'நீங்கள் நலமா?' என்றபுதிய திட்டம் மார்ச் 6-ம் தேதி(நாளை) தொடங்கப்பட உள்ளது.தொலைபேசி மூலமாக.. இதில், மாவட்ட ஆட்சியர்கள், அமைச்சர்கள், தலைமைச் செயலர்,அனைத்து துறைச் செயலாளர்கள், மக்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு கருத்துகளைக் கேட்டறிவார்கள். நானும் மக்களைத் தொடர்புகொண்டு பேசுவேன். இதன் அடிப்படையில் திட்டங்கள் மேலும் செம்மைப்படுத்தப்படும்.நிதி நெருக்கடி இருந்தாலும் எந்த நலத்திட்டமும் நிறுத்தப்படவில்லை.என கூறினார்

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback