Breaking News

பாமக தருமபுரி வேட்பாளர் மாற்றம் செளமியா அன்புமணி போட்டி என அறிவிப்பு

அட்மின் மீடியா
0

பாமக தருமபுரி வேட்பாளர் மாற்றம் செளமியா அன்புமணி போட்டி என அறிவிப்பு


2024 மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தருமபுரி மக்களவைத் தொகுதியில் அரசாங்கம் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது அவர் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி P.hd., போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இன்று காலை வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலில் மாவட்ட செயலாளர் அரசாங்கம், தருமபுரி தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார், இந்நிலையில் அக்கட்சி தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளார்

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback