திமுக கூட்டணியில் ராமநாதபுரத்தில் நவாஸ் கனி போட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
திமுக கூட்டணியில் ராமநாதபுரத்தில் நவாஸ் கனி போட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகமும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும், மற்றத் தோழமைக் கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக இன்று (2422024) தொகுதி உடன்பாடுகள் குறித்து தி.மு. கழகமும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் கலந்து பேசியதில் தி.மு.க. கூட்டணியில். இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பின்வரும் ஒரு தொகுதியில் போட்டியிடுவதென தீர்மானிக்கப்பட்டது.
தமிழகத்தை ஆளும் திமுக கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக, முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடப்பெற்றுள்ளன. இந்த கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தையை திமுக தலைவர்கள் தொடங்கி நடத்தி வந்த நிலையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இந்திய முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் , திமுக மூத்த நிர்வாகிகளை சந்தித்து பேசியுள்ளனர். அப்போது திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கபபட்டுள்ளது
இந்நிலையில் திமுக கூட்டணியில் இ.யூ.மு.லீ. கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் தொகுதியில் தற்போதைய எம்.பி.யான நவாஸ் கனியே மீண்டும் போட்டி என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி அறிவித்துள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு பார்க்க:-
https://twitter.com/KNavaskani/status/1762764315894161679
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்
