திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுகவிற்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு
மதிமுகவிற்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு
திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோவிற்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு செய்தது தேர்தல் ஆணையம்;
மதிமுக பம்பரம் சின்னம் கேட்ட நிலையில், தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு
திருச்சி நாடாளுமன்றத் தொகுதியின் திமுக கூட்டணி வேட்பாளர் மதிமுகவை சேர்ந்த துரை வைகோவிற்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக திருச்சி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான பிரதீப்குமார் அறிவித்துள்ளார்.
வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவடைந்துள்ள நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ள நிலையில் மதிமுக சார்பாக திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் துரை வைகோவிற்கு தீப்பட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்
