Breaking News

திமுக கூட்டணியில் நாமக்கல் தொகுதி கொ.ம.தே.க வேட்பாளர் மாற்றம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

திமுக கூட்டணியில் நாமக்கல் தொகுதி கொ.ம.தே.க வேட்பாளர் மாற்றம் முழு விவரம்

நாமக்கல் தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் மாற்றம்!ஏற்கனவே சூரியமூர்த்தி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் புதிய வேட்பாளராக மாதேஷ்வரன் அறிவிப்பு




நாமக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் கொமதேக சார்பில் சூரியமூர்த்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இப்போது அவருக்குப் பதிலாக மாதேஷ்வரன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் உள்ள கொமதேக கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டு இருந்தது, மேலும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி சார்பில் சூரியமூர்த்தி நாமக்கல் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது 

இந்நிலையில் கடந்த சில நாட்களாக எஸ்.சூரியமூர்த்தி தொடர்பான பழைய வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வந்தது

இந்நிலையில் கொ.ம.தே.க நாமக்கல் வேட்பாளர் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூரியமூர்த்திக்கு பதிலாக நாமக்கல் தொகுதியில் உதய சூரியன் சின்னத்தில் மாதேஷ்வரன் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் ஈஸ்வரன் அறிவித்துள்ளார்.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback