இலங்கை அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு இந்தியக் குடியுரிமை.. மத்திய அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
இலங்கை அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு இந்தியக் குடியுரிமை.. மத்திய அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
இலங்கை அகதிகள் முகாமில் பிறந்தவர்களுக்கு குடியுரிமை கோரி விண்ணப்பித்தால் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் வசித்த ஏராளமான தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாட்டில் உள்ளனர், அதன்படி அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிடக் கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ரவிகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் 2022 ம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம், முறையான பயண ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் குடியுரிமை பெற உரிமையில்லை என உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்து, தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இலங்கை அகதிகள் முகாமில் பிறந்தவர்களுக்கு குடியுரிமை கோரி விண்ணப்பித்தால், குடியுரிமை சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.\
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்
