குஜராத் பல்கலைக்கழக ஹாஸ்டலில் மாணவர்கள் மீது தாக்குதல் இரண்டு பேர் கைது, நடந்தது என்ன முழு விவரம்
குஜராத் பல்கலைக்கழகத்தில் தங்கும் விடுதியில் நள்ளிரவில் நடந்த சண்டையின் போது ஐந்து வெளிநாட்டு மாணவர்கள் பலத்த காயம் அடைந்தனர், மேலும் வெளிநாட்டு மாணவர்கள் தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குஜராத் பல்கலைக்கழகத்தில் உஸ்பெகிஸ்தான், ஆப்கானிஸ்தான் தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கையைச் சேர்ந்த மாணவர்கள், தங்கள் அறைகளில் தொழுகை நடத்திக் கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென வந்து இதற்கு எதிர்ப்புத் தெரிவித்னர்.
இதனால் இரு பிரிவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது, வெளிநாட்டு மாணவர்கள் வசிக்கும் குஜராத் பல்கலைக்கழகத்தின் ஏ பிளாக்கில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து அகமதாபாத் நகரின் கூடுதல் போலீஸ் கமிஷனர் (குற்றம்) நீரஜ்குமார் பட்கு ஜார், எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினார் மற்றும் தாக்குதல் நடத்தியவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதியளித்தார்.
மாணவர்கள் 5 பேர் மீது மர்ம கும்பல் கொடூர தாக்குதல். மேலும் மாணவர்களில் லேப்டாப், வாகனங்கள் உள்ளிட்டவற்றைச் சேதப்படுத்தியுள்ளனர்!
தடி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் விடுதிக்குள் நுழைந்த மர்ம கும்பல், விடுதியின் பாதுகாவலரையும் தாக்கிவிட்டு சென்றனர். இச்சம்பவம் குறித்து மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி, உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக இரண்டுபேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://twitter.com/AhmedabadPolice
Tags: இந்திய செய்திகள்
