சொத்துகுவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை கோரி ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி- உச்ச நீதிமன்றம்
சொத்துகுவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை கோரி ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி- உச்ச நீதிமன்றம்
சொத்துகுவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை கோரி ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கிற்கு எதிராக ஓ.பி.எஸ். தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
கடந்த 2001 முதல் 2006 ஆண்டு காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.72 கோடி சொத்து சேர்த்ததாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அவரது மனைவி விஜயலட்சுமி, மகன்கள் ஓ.பி.ரவீந்திரநாத், ஜெயபிரதீப், மகள் கவிதா பானு மற்றும் சகோதரர்கள் ஆகியோர் மீது தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை 2006-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது
இந்த வழக்கு சிவகங்கை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2012-ம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்
சென்னை உயர் நீதிமன்றத்தின் விசாரணைக்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.உயர் நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என கூறி ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்
