சவுதியில் ரமலான் பிறை தென்பட்டது வளைகுடா நாடுகளில் நோன்பு ஆரம்பம்
அட்மின் மீடியா
0
சவுதியில் ரமலான் பிறை தென்பட்டது வளைகுடா நாடுகளில் நோன்பு ஆரம்பம்
சவுதி அரேபியாவில் பிறை தென்பட்ட காரணத்தால் நாளை (மார்ச் 11) திங்கட்கிழமை ரமலான் பிறை ஒன்று என அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இன்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு தராவீஹ் தொழுகை நடைபெறும் என சவூதி அரசு அறிவித்துள்ளது
சவூதி அரேபியாவில் இன்று (மார்ச் 10) ஞாயிற்றுக்கிழமை ரமலான் மாத பிறையை பார்க்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்ட நிலையில் இன்று பிறை தென்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இன்று ஷபான் மாதத்தின் கடைசி நாள் என்றும் நாளை மார்ச் 11-ம் தேதி (திங்கள்) ரமலான் மாதத்தின் முதல் நாளாக இருக்கும் என்றும் சவூதி அரேபியாவின் பிறை பார்க்கும் கமிட்டி தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் உட்பட வளைகுடா நாடுகள் சவூதி அரேபியாவையே பின்பற்றும் என்பதால் அமீரகம், குவைத், கத்தார், பஹ்ரைன் ஆகிய நாடுகளும் நாளை ரமலான் முதல் நாளாக விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Tags: வெளிநாட்டு செய்திகள்
