Breaking News

கோவையில் பிரதமர் மோடியின் வாகனப் பேரணிக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

அட்மின் மீடியா
0

கோவையில் பிரதமர் மோடியின் வாகனப் பேரணிக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


கோவையில் பிரதமர் மோடி பேரணி நடத்த மாநகர காவல்துறை அனுமதி மறுப்பு பாதுகாப்பு காரணங்களால் அனுமதி வழங்க இயலாது என மாநகர காவல் ஆணையாளர் விளக்கம் அளித்துள்ளது அதில்

அனுமதி கோரியுள்ள பகுதி ஜனநடமாட்டத்துடன் போக்குவரத்து மிகுந்து காணப்படும் என்பதால் அன்றாட பணிகள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும்

10,ம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுவதால் மாணவர்கள் தேர்வுக்கு இடையூறு ஏற்படும்

பிரதமரின் பாதுகாப்புக்கு உள்நாட்டு, வெளிநாட்டு மத மற்றும் பிற தீவிரவாத அமைப்புகளால் அச்சுறுத்தல் உள்ளது. 4 கிமீ தூரத்திற்கு சாலையின் இரு புறங்களிலும் கூடும் ஒவ்வொரு தனிநபரை சோதனை செய்வது கடினம்.

கோவை மதரீதியிலான உணர்வு மிக்க நகரம் இதுவரை எந்த அரசியல் அல்லது அரசியல் அல்லாத தலைவருக்கும் சாலை மார்க்கமாக நிகழ்ச்சி நடத்தி மக்களை சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லை

இந்நிலையில், கோவையில் பிரதமர் மோடியின் பேரணிக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் கோவையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பேரணிக்கு அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளார்

பேரணிக்கு அனுமதி கோரி கோவை மாவட்ட பாஜக சார்பில் தொடரப்பட்ட மனுவில் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்

பேரணி செல்லும் வழி, தொலைவு மற்றும் நேரம் ஆகியவற்றை கோவை காவல்துறையினரே முடிவு செய்யலாம்

பேரணி செல்லும் பகுதிகள், சாலைகளில் பதாகைகள் வைக்க அனுமதி இல்லை என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback