Breaking News

சென்னையில் பெண்களுக்கான அரசு வேலை வாய்ப்பு மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0
பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகம், வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணி நேரமும் உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்குவதற்கான நோக்கத்துடன் பெண்கள் உதவி மையத்தை அமைக்க ஒரு புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளது. 

அதில் ஒன்றான ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC). பெண்கள் உதவி மையம் (181) போன்ற பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் முக்கிய அம்சமாக மருத்துவ உதவி ஆலோசனை. சட்டம், உளவியல் மற்றும் உணர்வியல் ரீதியான ஆதரவு வேண்டியுள்ள ஒவ்வொரு மகளிரும் பயனடையும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. 

இத்திட்டத்தில் தொகுப்பூதிய / ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய கீழ்கண்ட தகுதிகள் மற்றும் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


வழக்கு பணியாளர்(Case workers) :-

(Bachelor's Degree in Social Work( பெற்றிருக்க வேண்டும். மேலாண்மை வளர்ச்சியில் உளவியல் ஆலோசகர் (Counseling Psychology) (Seeu) (Development Management) Quad வன்முறைகனை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாராத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் 1 வருட முன் அனுபவம் உடையவராகவும், உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப்பணிகளிலோ குறைந்த பட்சம் 1 வருட அனுபவம் உடையவராகவும் இருக்க வேண்டும். வயது 35க்குள் இருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ.15,000/ஆகும்.
 

பாதுகாப்பாளர் (Security Guard) 

அரசு அல்லது புகழ்பெற்ற நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளராக பணியாற்றிய அனுபவம் மற்றும் உள்ளூரைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். ஆண். பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.10,000/- ஆகும்.

பன்முக உதவியாளர் (Multi Purpose Helper)

ஏதாவது அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் உடையவராக இருக்க
வேண்டும். விண்ணப்பதாரருக்கு சமையல் தெரிந்திருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கவாம். மாத ஊதியம் ரூ.6,400/- ஆகும்.

விண்ணப்பிப்பது எப்படி:-

விரும்பும் பதவிகளுக்கு https://chennai.nic.in/ erன்னும் இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் உரிய சான்றிதழ்களுடன் 13.03.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 8-வது தளம்.சிங்காரவேலர் மாளிகை, இராஜாஜி சாலை, சென்னை-01 என்ற முகவரியில்நேரடியாகவோ அல்லது shodswosouth@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ விண்ணப்பம் செய்திடுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி ரஷ்மி சித்தார்த் ஐகடே இ.ஆ.ப. அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.

 

விண்ணப்ப படிவம் டவுன்லோடு செய்ய:-

https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2024/03/2024030447.pdf

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2024/03/2024030417.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback