தேர்தல் பத்திர விவரங்களை நாளை மாலைக்குள் வெளியிட எஸ்பிஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு முழு விவரம்
தேர்தல் பத்திரங்கள் விவரங்களை நாளை மாலைக்குள் வெளியிட எஸ்பிஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு முழு விவரம்
அரசியல் கட்சிகளுக்கு ரொக்கமாக நன்கொடை தருவதை தவிர்க்கும் பொருட்டு 2018 ஜனவரியில் 'தேர்தல் பத்திரம்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் முறைக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்
கடந்த மாதம் 15ம் தேதி தேர்தல் பத்திரம் திட்டம் செல்லாது. அது தொடர்பாக திருத்தப்பட்ட சட்டங்களும் செல்லாது. எஸ்பிஐ வங்கி உடனடியாக தேர்தல் பத்திரம் விநியோக பணியை நிறுத்த வேண்டும்.கட்சிகளுக்கு நன்கொடையாளர்கள் பணம் அளித்துள்ள விவரத்தை இந்திய தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும். இந்திய தேர்தல் ஆணையம் அதன் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் மார்ச் 31ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில் தேர்தல் பத்திர விவரங்களை நாளை மாலைக்குள் எஸ்பிஐ வங்கி வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட எஸ்பிஐ வங்கி கால அவகாசம் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மேலும் தேர்தல் பத்திர விவரங்களை நாளை மாலைக்குள் எஸ்பிஐ வழங்க வேண்டும் என்றும், கட்சிகள் பெற்ற தேர்தல் பத்திர விவரங்களை மார்ச் 15க்குள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார். அதேபோல், நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்த தவறினால், அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை பாயும் எனவும் எச்சரித்தார்.
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்
