Breaking News

தமிழகத்தில் ரமலான் அன்று பொதுத்தேர்வா பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!!!

அட்மின் மீடியா
0

பிறை தென்பட்டு ஏப்ரல் 12-ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டால் அன்றைய தினம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறாது என  மயிலாடுதுறையில் காங்கிரஸ் வேட்பாளர் சுதாவை அறிமுகப்படுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் இப்போது 11, 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது மேலும் 1 முதல் 9 ம் வகுப்புகளுக்கான தேர்வுகளும் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் தமிழகத்தில் பிறை தெரியும் பட்சத்தில் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.இதனால் அன்றைய தினத்தில் பொதுத் தேர்வுகள் நடைபெறுமா என்ற குழப்பம் அனைவரது மனதிலும் இருந்து வந்தது. 

மேலும் ரம்ஜான் பண்டிகையின் போது விடுமுறை அளிக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வரும் 12ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடும் பட்சத்தில் அன்று நிச்சியமாக பொது தேர்வு இருக்காது என தெரிவித்துள்ளார்

நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு, இன்று மயிலாடுதுறை மாவட்டம் சென்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அத்தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுதாவை செயல்வீரர்கள் கூட்டத்தில் அறிமுகப்படுத்தி வைத்தார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் கூறியதாவது, 

பேசிய அமைச்சரிடம் ரமலான் பண்டிகையின்போது பொதுத்தேர்வு நடைபெறுமா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து அமைச்சர் கூறியதாவது, வரும் ஏப். 12ம் தேதி பிறை தென்பட்டு ரமலான் பண்டிகை வரும் பட்சத்தில் அன்றைய தேதியில் தமிழ்நாட்டில் நிச்சயமாக பொதுத்தேர்வு இருக்காது என கூறினார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback