பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக சென்னை, ராமநாதபுரத்தில் என்ஐஏ சோதனை
பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக சென்னை, ராமநாதபுரத்தில் என்ஐஏ சோதனை
கடந்த மார்ச் 1 ஆம் தேதி பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே குந்தலஹள்ளி பகுதியில் அமைந்துள்ள ராமேஸ்வரம் கபே உணவகத்தில் வெடிகுண்டுகள் வெடித்து சிதறின. இந்த வெடிகுண்டு விபத்தில் இதில் உணவகத்தில் இருந்த 3 ஊழியர்கள் மற்றும் ஒரு பெண் உட்பட 8 பேர் படுகாயமடைந்தனர்.
உணவகத்தில் இருந்து மீட்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் அனுமதிப்பட்டனர் .வெடிகுண்டு விபத்து தொடர்பாக இதுவரை 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தநிலையில் இந்த வழக்கு என்ஐஏ-க்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழ்நாட்டில் சென்னை,பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக சென்னை, ராமநாதபுரத்தில் என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது.
சென்னை மண்ணடி, முத்தையால் பேட்டை, பிடாரியார் கோயில் தெருவில் உள்ள வீட்டில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல் ராமநாதபுரம்மாவட்டம் கீழக்கரை பருத்திகாரன் தெருவில் சம்சூதீன் என்பவர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை ஹவாலா பணம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்
