Breaking News

சென்னை தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! முழு விவரம்

அட்மின் மீடியா
0

சென்னை தலைமை செயலகத்திற்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு

சென்னையில் இன்று காலை தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்து தொலைபேசியை துண்டித்து உள்ளார்.இதனால் அதிர்ச்சி அடைந்த தனியார் தொலைக்காட்சி ஊழியர்கள் இது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து உடனடியாக விரைந்து சென்ற, மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் குழு சென்னை தலைமை செயலகம் முழுவதும் இன்று காலை முதல் தீவிர சோதனைகளை மேற்கொண்டனர். மோப்ப நாய்களை கொண்டு தலைமை செயலகம் முழுவதும் உள்ள பேரவை கூடம் அமைச்சரவை முக்கிய அறைகள், வெளிப்பகுதிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கடும் சோதனையில் ஈடுபட்டனர் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையின் முடிவில் அந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்துள்ளது. மேலும், வேறு எதும் காரணங்களுக்காக அந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதா என்பது குறித்தும் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback