Breaking News

விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தல் அதிமுக சார்பில் ராணி போட்டி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அட்மின் மீடியா
0

விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தல் அதிமுக சார்பில் ராணி போட்டி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ராணி போட்டியிடுவார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு தொகுதிக்கு ஏப்.19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த விஜயதரணி, பாஜகவில் சோ்ந்ததால் அவா் தனது சட்டப்பேரவை உறுபிப்பினா் பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.

இதனால் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி காலியாக உள்ளதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்.19ல் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது.

கடைசியாக 2006-ம் ஆண்டு விளவங்கோடு தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்றது. 2011, 2016 மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல்களில் விஜயதரணி வெற்றி பெற்ற பிறகு தொடர்ந்து 15 ஆண்டுகாலம் எம்எல்ஏவாக இருந்தார்

இந்நிலையில் விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ராணி போட்டியிடுவார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback