Breaking News

அகில இந்திய சமத்துவ கட்சியை பாஜகவுடன் இணைத்தது ஏன்? - சரத்குமார் விளக்கம்!

அட்மின் மீடியா
0

அகில இந்திய சமத்துவ கட்சியை பாஜகவுடன் இணைத்த காரணத்தை சரத்குமார் கூறியுள்ளார்.


சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழகப் பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைத்தார்

சரத்குமாரை தமிழகத்தில் அடைத்துவைக்க பாஜக விரும்பவில்லை; தேசியத்திற்கு தேவைப்படுகிறார் என  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்த போது, மக்கள் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியுடன் இணைந்து செயல்பட்டால் என்ன? எனத் தோன்றியதால் நள்ளிரவில் அண்ணாமலையை அழைத்துக் கூறினேன்.

யாருடன் கூட்டணி, எவ்வளவு சீட், என்ன டிமேண்ட் வைப்பது என்பது மட்டும்தானா அரசியல்? மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்ற கொள்கை அடிபட்டுவிடுகிறதே! நாமும் அந்த வழியில் செல்ல வேண்டுமா என்ற கேள்வி என் மனதில் தோன்றியது. எனவே நமது சக்தியை, மோடி என்னும் சக்தியோடு இணைத்து செயல்பட வேண்டும் என்று சிந்தித்து முடிவெடுத்திருக்கிறேன். 

நாட்டின் வளர்ச்சிக்காகவும், வருங்கால இளைஞர்களின் நலனுக்காகவும் பாஜகவில் இணைந்துள்ளோம். இது தொடர்பாகக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவருடனும் ஆலோசனை செய்த பிறகு ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவு இது.

பிரதமர் மோடி காமராஜரைப் போல நல்ல ஆட்சி செய்து வருகிறார். இதனால், பிரதமர் மோடியை இந்திய திருநாடு மட்டுமல்லாமல், உலகமே அவரைப் பாராட்டுகிறது. நாங்கள் மோடியை மூன்றாவது முறையாகப் பிரதமர் ஆக்குவோம் இது சமக-வின் முடிவல்ல. புதிய எழுச்சியின் தொடக்கம் என கூறினார்.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback