Breaking News

அமீரகத்தில் பணியாற்றும் இந்திய தொழிலாளர்களுக்கு புதிய ஆயுள் காப்பீடு முழு விவரம்

அட்மின் மீடியா
0

அமீரகத்தில் இந்திய தொழிலாளர்களுக்கென புதிய காப்பீட்டுத் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது விபத்து அல்லது இயற்கை காரணங்களால் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு 75,000 திர்ஹம்ஸ் வரை இழப்பீடு கிடைக்கும்

ஐக்கிய அரபு எமிரேட்சில் பணியாற்றும் இந்திய தொழிலாளர்களுக்கு, புதிய ஆயுள் காப்பீடு திட்டம் கிடைக்க வகை செய்துள்ளதாக துபாயில் உள்ள இந்திய துாதரகம் கூறியுள்ளது.


இது தொடர்பாக துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில், இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கென மார்ச் 1ஆம்  முதல் Life Protection Plan-LPP என்றழைக்கப்படும் புதிய காப்பீட்டுத் திட்டம் அமலுக்கு வந்ததாகத் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 2022ம் ஆண்டில், 1,000 ப்ளூ காலர் தொழிலாளர்கள் இயற்கை மற்றும் பல்வேறு காரணங்களால் உயிரிழந்து விட்டனர். இந்நிலையில் ஐக்கிய அமீரக அரசு, இந்திய தொழிலாளர்களுக்காக எல்பிபி என்ற புதிய உயிர் காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது

பொதுவாக வேலைக்கு எடுக்கும் நிறுவனங்கள், மருத்துவ காப்பீடு மற்றும் தொழிலாளர் இழப்பீடு திட்டத்தின் கீழ் மட்டும் காப்பீடு செய்கின்றன.இதில் பணியின் போது காயம் அல்லது விபத்து ஏற்பட்டால் மட்டுமே இழப்பீடு வழங்கப்படும். மாரடைப்பு உள்ளிட்ட இயற்கை மரணங்கள் நேர்ந்தால் இழப்பீடு கிடைக்காது.

இதை கவனத்தில் எடுத்த இந்திய துாதரகம், அங்கு உள்ள நிறுவனங்கள் மற்றும் காப்பீடு வழங்குபவர்களிடம் பேசி, இயற்கை மரணங்களுக்கும் இழப்பீடு தரும் ஆயுள் காப்பீடு திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. 

மார்ச் 1ம் தேதியில் இருந்து இந்திய தொழிலாளர்களுக்கு இந்த ஆயுள் காப்பீடு பாதுகாப்பு கிடைக்கிறது.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback