குழந்தைகள் கடத்தப்படுவதாக பொய்யான செய்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை - போலீசார் எச்சரிக்கை!
குழந்தைகள் கடத்தப்படுவதாக பொய்யான செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை!
இது தொடர்பான செய்திகளை காணொலியில் பார்த்தாலோ, கேட்டறிந்தாலோ மக்கள் அச்சமடையவோ, பதற்றமடையவோ வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
கடந்த சில நாடளாக சமூக வலைத்தளங்களில் குழந்தை கடத்தல் தொடர்பாக வீடியோக்கள் சில பரவி வருகின்றது, ஆனால் அவை அனைத்தும் பொய்யான வீடியோக்கள் எனவே பொதுமக்கள் இணையத்தில் பரவும் போலி வீடியோவை யாரும் நம்ம வேண்டாம் என்று சென்னை மாநகர காவல்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இது போன்ற போலி வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பரப்பும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமீபகாலமாக குழந்தைகள் கடத்தல் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ தொடர்பாக உயர் அதிகாரிகள் விளக்கம் அளித்து வருகின்றனர். பொது மக்கள், பதற்றம் அடைய வேண்டாம் என்று காவல் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags: தமிழக செய்திகள்
