Breaking News

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டது முழு விவரம்

அட்மின் மீடியா
0

மதுரை தோப்பூரில் அடிக்கல் நாட்டிய 5 ஆண்டுகளுக்கு பின் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை தொடங்கப்பட்டுள்ளது

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது  10 தளங்களுடன் 870 படுக்கை வசதிகளுடன் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படுகிறது, மேலும் 33 மாதங்களில் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது

2019 ஜனவரி 27ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மதுரை எய்ம்சுக்கு அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழகத்தின் மிகப் பெரிய திட்டமான எய்ம்ஸ் கட்டுமான வாஸ்து பூஜை மிக எளிமையாக செய்யப்பட்டது ஏன் என்று எழுந்துள்ள கேள்விக்கு 

மதுரை எய்ம்ஸ் சார்பாக வந்துள்ள செய்திக்குறிப்பிலும், முன்கட்டுமானப் பணிகள் துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் அமையவுள்ள இடத்தை சீர்படுத்தும் பணிகள் மட்டுமே துவங்கவுள்ள நிலையில் கட்டுமானப் பணிகள் எப்போது துவங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback