Breaking News

சென்னை மாம்பலம் பகுதியில் ஸ்விக்கி ஊழியர் குழந்தை கடத்தலில் ஈடுபட்டதாக பரவும் வீடியோ பொய்யானது முழு விவரம்

அட்மின் மீடியா
0

சென்னை மாம்பலம் பகுதியில் ஸ்விக்கி ஊழியர் குழந்தை கடத்தலில் ஈடுபட்டதாக பரவும் வீடியோ பொய்யானது முழு விவரம்



கடந்த சிலநாட்களாக சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ ஒன்றில்  ஸ்விக்கி ஊழியர் ஒருவர் குழந்தை கடத்தலில் ஈடுபட்டதாக ஒரு வீடியோவினை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்

இது குறித்து தமிழக உண்மை சரிபார்ப்பு குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில் அந்த வீடியோ பொய்யானது என அறிவித்துள்ளது:-

பரவிய வதந்தி

சென்னை, மாம்பலம் பகுதியில் 'ஸ்விக்கி' ஊழியர் ஒருவர் குழந்தை கடத்தலில் ஈடுபட்டதாக சமூக வலைதளங்களில் காணொளி பரப்பப்படுகிறது.

 

உண்மை என்ன?

இச்செய்தி முற்றிலும் பொய்யானதாகும்.

காணொளியில் உள்ள ஸ்விக்கி ஊழியர் 28.02.2024 அன்று, மேற்கு மாம்பலம் பகுதிக்கு வேலை தொடர்பாகச் சென்றுள்ளார். சாலையோரமாக தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி அதில் அமர்ந்துள்ளார். அப்போது, அங்கு வந்த நபர் ஒருவர் இவரிடம் வீண்தகராறில் ஈடுபட்டு, தகாத வார்த்தைகளால் திட்டி, அடித்துள்ளார். மயே வெ

ஸ்விக்கி ஊழியர் இதுதொடர்பாக அசோக்நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, இது குழந்தைக் கடத்தல் சம்பவம் அல்ல.

குழந்தைகளின் புகைப்படங்கள், காணொளிகளை சித்தரித்து இதுபோன்ற தவறான தகவல்களைப் பரப்புவது சட்டப்படி குற்றமாகும்.

Tags: மறுப்பு செய்தி FACT CHECK

Give Us Your Feedback