வயதான மாமனாரை இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கும் மருமகள் வைரல் சிசிடிவி வீடியோ
வயதான மாமனாரை இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கும் மருமகள் வைரல் சிசிடிவி வீடியோ
மங்களூருவில் உள்ள குல்சேகர் பகுதியில் பத்மநாப சுவர்ணா என்ற 87 வயது முதியவர் அவரது மருமகள் உமா சங்கரியால் கடுமையாக தாக்கப்பட்டார். மார்ச் 9 ஆம் தேதி நடந்த தாக்குதலில், வாக்கிங் ஸ்டிக் பயன்படுத்தப்பட்டது, பாதிக்கப்பட்ட முதியவர் பலத்த காயமடைந்தார். மங்களூருவை சேர்ந்த பத்மநாப சுவர்ணா என்பவர் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கர்நாடக மாநிலம் மங்களூரை சேர்ந்தவர் பதமனாபா. இவரது மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். மருமகள் உமா சங்கரி கர்நாடக மாநில மின்சார வாரியத்தில் அட்டாவரில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.பணியாற்றி வருகிறார்.
வீட்டில் இருக்கும் தந்தையைக் கண்காணிக்க, அவரது மகன் தங்கும் அறை மற்றும் வீட்டைச் சுற்றி கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளார்
இந்நிலையில், மார்ச் 9ம் தேதி மதியம், மருமகள் உமா சங்கரி, வயதான மாமனாரை, இரும்பு கம்பியால் தாக்கும் காட்சி, அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
வெளிநாட்டில் இருந்து சிசிடிவி காட்சிகளைக் கண்காணித்த பத்மநாபாவின் மகன் உடனடியாக தனது மகளைத் தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்துள்ளார்
பாதிக்கப்பட்டவரின் மகள் அளித்த புகாரின் பேரில், ச்ம்பவ வீட்டிற்க்கு வந்த போலீசார் முதியவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து உமா சங்கரியை போலீசார் கைது செய்தனர்.
இச்சம்பவம் உள்ளூர் சமூகத்தில் அதிர்ச்சி அலைகளை அனுப்பியுள்ளது,
வைரல் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://www.youtube.com/watch?v=BmxgfxWYayI&t=47s
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ
