Breaking News

குடியுரிமை திருத்தச் சட்டம் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் எதிர்ப்பு

அட்மின் மீடியா
0

குடியுரிமை திருத்தச் சட்டம்  தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் எதிர்ப்பு


பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளில் மத அடிப்படையில் இன்னல்களை எதிர்கொண்டு, 2014க்கு முன்னர் இந்தியாவுக்குக் குடிபெயர்ந்த இஸ்லாமியர்கள் தவிர்த்து இந்து, சீக்கிய, புத்த, சமண, பார்ஸி, கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க இச்சட்டம் வகை செய்கிறது.

கடந்த 2019 ஆம் தேதி இச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில் நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவரும் , நடிகருமான விஜய் தனது சமூகவலைத்தள பக்கத்தில், “சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்திச் செயல்படுத்தப்படும் இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 (CAA) போன்ற எந்தச் சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல. தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

குடியுரிமை திருத்தம் தொடர்பான அறிவிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

கடந்த 2014 டிசம்பர் 31 ஆம் தேதி வரை பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து, துன்புறுத்தலால் வெளியேறி, இங்கு வந்து வசித்து வரும் இந்துக்கள், சீக்கியர்கள், ஜெயினர்கள், பார்சிகள், புத்திஸ்டுகள் மற்றும் கிருஸ்துவர்கள் ஆகியோருக்கு மட்டுமே குடிமக்கள் உரிமை அளிப்பது என்றும். துன்புறுத்தலுக்கு ஆளாகி வந்த முஸ்லிம்கள் குடியுரிமை பெற உரிமை இல்லை என்கிறது குடியுரிமை திருத்தச் சட்டம் 2019- இந்தச் சட்டத் திருத்தம் வேற்றுமையில் ஒற்றுமை பேணும் மரபில் நின்று, வழிவழியாக சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வரும் மக்களை பிளவுபடுத்தும். குறிப்பிட்ட ஒரு சிறுபான்மை இன மக்கள் மீது வெறுப்பும், பகையும் வளர்க்கும் பேரழிவு ஏற்படுத்தும் என்பதால் சட்ட திருத்த நடவடிக்கையை எதிர்த்து நாடு முழுவதும் ஆர்த்தெழுந்து போராடியதை மறந்து விட முடியாது.

நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமலாக்கத்திற்கு வந்ததாக அறிவிக்கை செய்திருப்பது வேலை வாய்ப்பு, விலைவாசி உயர்வு, வரிச்சுமை, வேலையிழப்பு, கடன் சுமை, சாதிய அடக்குமுறைகள், பெண்கள் மீதான தாக்குதல்கள் போன்ற வாழ்வாதார பிரச்சினைகளில் இருந்து மக்கள் கவனத்தை திசை திருப்பி, மத உணர்ச்சிகளை தூண்டி அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியாகும். பாஜக ஒன்றிய அரசின் வன்மமும், வெறுப்பும் நிறைந்த, சமூக நல்லிணக்கத்தை, நிலை குலைக்கும் குடியுரிமை திருத்த சட்ட அமலாக்க அறிவிக்கை வெளியிட்டதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிப்பதுடன், குடியுரிமை திருத்தம் தொடர்பான அறிவிக்கையை திரும்பப் பெற வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் பிறந்த யாரும் இந்த நாட்டின் குடியுரிமைப் பெறலாம் என்பதற்கு எதிராக சிஏஏ சட்டம் உள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தியது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை 

இந்திய மக்கள் ஒருபோதும் பாஜகவை மன்னிக்க மாட்டார்கள். குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது. ஆர்.எஸ்.எஸ் கொடுக்கும் திட்டங்களை பாஜக தொடர்ந்து அமல்படுத்தி வருகிறது. 

இந்தியாவில் சிறுபான்மை மக்கள் நிம்மதியாக வாழக்கூடாது என்பதற்காகவே சிஏஏ சட்டத்தை மத்திய பாஜக அரசு அமல்படுத்தி உள்ளது.சிறுபான்மை மக்களை இந்தியாவை விட்டு வெளியேற வைப்பதற்கான தொடர் அச்சுறுத்தல்களை மத்திய பாஜக அரசு செய்து வருகிறது. 

இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவில் பிறந்த யாரும் இந்த நாட்டின் குடியுரிமைப் பெறலாம் என்பதற்கு எதிராக சிஏஏ சட்டம் உள்ளது. பிரித்தாலும் ஆர்.எஸ்.எஸுன் கொள்கைகளை பாஜக அமல்படுத்துகிறது என கூறியுள்ளார்.


Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback